இந்தியாவில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் - மத்திய சுகாதாரத்துறை

 
இந்தியாவில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றின் இந்த இரண்டாவது அலையானது, இளம் வயதினரை அதிகளவில் குறிவைத்து தாக்குகிறது.

ஒருபக்கம் கொரோனாவை விரட்ட நாட்டில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

கொரோனா தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவில் இதுவரை 15,49,89,635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. 105-வது நாளான நேற்று (ஏப்ரல் 30, 2021), நாடு முழுவதும் 27,44,485 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக (81.84%) இன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web