நாடு முழுவதும் முதல் நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி : ஒன்றிய சுகாதாரத்துறை

 
Vaccination

கொரோனாவுக்கு எதிராக 15 - 18 வயது சிறுவர், சிறுமியருக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 25-ந் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார்.

அப்போது அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது என அறிவித்தார்.

இதன்படி இன்று சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. நாட்டில் 3-வது அலை பரவலுக்கு மத்தியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்றது.

முதல் நாளான இன்று 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். 15-18 வயது வரம்பிலான அனைவருக்கும் கோவேக்சின் தடுப்பூசி போட மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web