இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 30 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா... 374 பேர் பலி!!

 
Corona India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,11,74,322 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 374 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 45,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 3,03,53,710 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4,06,130 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 17,92,336 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 44,73,41,133 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 41 கோடியே 18 லட்சத்து 46 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

From around the web