கேரளாவில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா... 38 பேர் பலி!!

 
KCV

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்தநிலையில் தற்போது பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கேரளாவில் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 52,39,232 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 38 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 47,066 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 20,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 3,052 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 51,71,080 ஆக உயர்ந்துள்ளது என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் இதுவரை 4 கோடியே 68 லட்சத்து 73 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

From around the web