மும்பையில் குறையத் தொடங்கும் கொரோனா தொற்று?

 
மும்பையில் குறையத் தொடங்கும் கொரோனா தொற்று?

கடந்த 27 நாட்களில் முதல் முறையாக கொரோனா தொற்று மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை மாநகரில் இன்று குறைவாக பதிவாகியுள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்று 3876 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 30 ம் தேதிக்குப் பிறகு குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவானது இன்று தான். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் போல், இந்தியாவில் மும்பையில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அங்கு இது வரையிலும் 6 லட்சத்து 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்றைய 70 உயிரிழப்புகளையும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரத்து 853 பேர் கொரோனாவினால் மும்பையில் இறந்துள்ளனர். இந்த தகவல்களை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா தொற்று குறையத் தொடங்குவது நம்பிக்கையூட்டும் விஷயமாகும்.

From around the web