கூடுதல் ஆணையர் உள்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா..!

 
Delhi-police-affected-corona

டெல்லியில் கூடுதல் ஆணையர் உள்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் கடந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை உச்சம் அடைந்தது.  இதில், டெல்லியில் 2021-ம் ஆண்டு மே 1-ந் தேதி 25,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்பின்பு முதன்முறையாக அதிக அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 22,751 பேருக்கு நேற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லி போலீசாருக்கு அதிகளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.  டெல்லியில் காவல் நிலைய தலைமையகங்கள் உள்பட அனைத்து பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையாளர் சின்மோய் பிஸ்வால் உள்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web