ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா உறுதி!!

 
Rajnath-singh

லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து  வருகிறது. அதிகரித்து வரும் கொரொனா பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை.  

அந்த வகையில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “லேசான அறிகுறிகளுடன் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டுத்தனிமையில் உள்ள்ளேன். சமீபத்தி என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

From around the web