புது யுத்தியைக் கையிலெடுக்கும் காங்கிரஸ்! திட்டம் வெற்றி பெறுமா?

வார்டு தலைவர் முதல் மாநில தலைவர் வரைகாங்கிரஸ் டெல்லி மேலிடமே முடிவு செய்கிறது.இந்த தேர்தல் காலகட்டத்தில் அந்த நடைமுறையை மாற்ற,, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருகிறது. கட்சி மாநில நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில தலைமை வசம் ஒப்படைக்க கட்சி மேலிடம் சிந்தித்து வருகிறது. அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தயாரித்த வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் மேலிடம் பரிசீலனையில் உள்ளது. மண்டலம், மாவட்ட தலைவர்கள் தேர்வில் கட்சி மேலிடம் தலையிட கூடாது என 23 அதிருப்தி தலைவர்களின் கருத்தை காங்கிரஸ் மேலிடம் கவனத்தில் கொண்டுள்ளது.
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வுசெய்ய 23 ஜி குழுவை சேர்ந்த மஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் பிருதிவிராஜ் சவானை மேலிடம் அனுப்பி உள்ளது. அடிமட்ட ஆய்வு, தொண்டர்களின் தேர்வு,, அடிப்படையில் தொகுதிக்கு 3 பேரை அடையாளம் காண்போம், மாவட்ட தலைவரின் கருத்தையும் கேட்போம். இதே பாணியில் தான் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்களையும் முடிவு செய்வோம் என சவாண் மார்ச் 3 அன்று டெல்லியில் தெரிவித்தார்.
1967 வரை தமிழகத்தை சிறப்பாக ஆட்சிசெய்த காங்கிரஸ் இன்று 30 தொகுதிகளுக்கு திமுகவிடம் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. மாநிலத் தலைமையே முடிவு செய்துகொள்ள மேலிடம் அனுமதித்து விட்டதாக தகவல் கசிகிறது. இந்தமுறையில் வேட்பாளர்தேர்வு நடந்தால் தோல்விக்கே இடமில்லை. லோக்கல் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் பரிச்சயமான காங்கிரஸ் வேட்பாளர் வென்றே தீருவார். ஆர் எஸ் எஸ் , பாஜக தமிழ்நாட்டில் தலைதூக்குவதற்கு மக்களை குறை சொல்ல முடியாது. நாம் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு வழியில் நமது கடமையை ஆற்றவில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரி குறிப்பிட்டுள்ளது உண்மையே.
கிராமம், நகரம், மண்டலம், மாவட்ட காங்கிரஸ் அமைப்புகளுக்கும் வேட்பாளர் தேர்வில் கடமை பொறுப்பு விதித்தால் கூட்டணி கட்சிகள் காங்கிரசை அலட்சியப்படுத்த முடியாது. நல்ல தொடக்கம், தொடர வேண்டும்
- வி.எச்.கே.ஹரிஹரன்