‘சித்து’ விளையாட்டுக்களை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ‘கேப்டன்’ அம்ரிந்தர் சிங்!

 
Amrinder Singh

984 ல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை ஆன பிறகு சீக்கியர் காங்கிரஸ் உறவு அறுந்து போனது. பரஸ்பர விரோதம் நிலவிய அந்த மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முக்கியக் காரணம் கேப்டன் அம்ரிந்தர் சிங் தான். கட்சியையும் ஆட்சியையும் தனது  கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 

கிரிக்கெட் வீரரும் முன்னாள் மாநில அமைச்சருமான நவஜோத்சிங் சித்து , கேப்டனுக்கு  எறும்பு, கொசுக்கள் போல தொல்லை கொடுத்து வந்தார். அம்ரிந்தர் சிங் அவரை பொருட்படுத்தவில்லை. சித்து டெல்லி மேலிடத்தில் கோள்மூட்டிப் பார்த்தார். 

கோஷ்டி மோதலை விசாரிக்க , பஞ்சாப் காங்கிரஸ் பிரமுகர்களை காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்தது.  டெல்லி புறப்படுமுன் அம்ரிந்தர் சிங்,  ஆம் ஆத்மி   கட்சியை சேர்ந்த 2  எம் எல் ஏ க்கள்  மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த சுக்பால் கைரா ஆகிய மூவரையும் காங்கிரசில் இணைத்தார். 

டெல்லி மேலிடத்தின் சம்மதம் பெறுமுன் ஆம் ஆத்மி கட்சிக்காரர்களை காங்கிரசில் இணைத்துக் கொண்டதன் மூலம் தன்னை மாற்றினால் கட்சி பிளவுபடும் என சமிக்ஞை காட்டிவிட்டார் கேப்டன் அம்ரிந்தர் சிங்.  2022 பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கு யுக்தி வகுக்க அழைத்துள்ளோம் என டெல்லி காங்கிரஸ்  மேலிடம்  சமாளித்துள்ளது. 

பிரதமர் நேரு காலத்தில் எல்லா மாநிலங்களிலும் ஒரு பிரபலமான மக்கள் செல்வாக்குள்ள தலைவரை வளர்த்து விட்டார். அதனால் தான் அவரது காலத்தில் நாடெங்கும் காங்கிரஸ் அசுர பலத்துடன் விளங்கியது. அந்த பார்முலாவை காங்கிரஸ் மீண்டும் கையில் எடுத்தால் தான் பழைய பலம், வேகம் பெற முடியும்.

-வி.எச்.கே.ஹரிஹரன் 

From around the web