மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ!

 
Mukul-Roy

பாஜகவில் இருந்து விலகிய முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இன்று இணைந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது.

இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவில் இணைந்தார்.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்த முகுல்ராய்க்கு, பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேசப்படுகிறது. கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்று கூறப்பட்டது.

இதற்கிடையே மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். இதையடுத்து, முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார். தனது மகன் சுப்ரன்ஷு ராயுடன் கட்சியில் இணைந்து கொண்டார். 

From around the web