பாஜக அமைச்சர் திடீர் ராஜினாமா... அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்ததால் பரபரப்பு

 
Swami-Prasad-Maurya-quits-BJP

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சுவாமி பிரசாத் மயூரா திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், உத்தர பிரதேச தேர்தல் நாடு முழுவதும் உற்று நோக்கப்படுவது வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பால் உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அதே நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி முனைப்பாக உள்ளது. அவற்றுடன் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளன. தற்போதைய சூழலில் அங்கு 4 கட்ட போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சுவாமி பிரசாத் மயூரா திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இருந்தும் விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்துள்ளதால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web