வங்கிக் கடன் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்! நிர்மலா சீதாராமன்!
கொரோனா பரவல் காரணமாக சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பலவகையான யுத்திகளை கையாண்டு வருகிறது. இதனை சீராக்கும் விதமாக கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை , விரைந்து செயல்படுத்தும் நோக்கத்தில் நிதியமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை இந்திய ரிசா்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கடன்களும் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன.
அவா்களுடைய கடன் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீண்டும் ஒருமுறை கடன் மறுசீரமைப்பு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி கடனை திருப்பிச் செலுத்த வங்கிகள் கூடுதல் கால அவகாசம் அளிப்பதுடன், வட்டி விகிதமும் குறைக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடா்பான வங்கிகளின் கொள்கைகளையும், திட்டங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்தும், சுமுகமாகவும், விரைந்தும் கடன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.