கடவுளை வணங்கிய பின் உண்டியலை அலேக்காக தூக்கிய பலே திருடன்..! போலீசில் சிக்கியது எப்படி?

 
Thane

மராட்டியத்தில் கோவிலில் திருடும் முன் திருடன் சாமி கும்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மராட்டிய மாநிலம் மேற்கு தானே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரின் செயலால் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே நகரின் கோபத் பகுதியில் உள்ள கோவிலில் தான் கடந்த 9-ம் தேதி திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கோவிலுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த உண்டியலை தூக்க எத்தனித்திருக்கிறார்.

அப்போது உண்டியலை திருடுவதற்கு முன்பு கடவுள் சிலை முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு அலேக்காக உண்டியலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்திருக்கிறார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.


இதைத் தொடர்ந்து கோவிலுக்குள் வந்து பார்த்த பூசாரி உண்டியல் பெட்டி இல்லையென்றதும் போலீசிடம் புகார் கொடுத்திருந்தார். சிசிடிவியை ஆராய்ந்து பார்த்ததில் விசயம் தெரிந்ததும் சம்பந்தபட்ட அந்த திருடனை நேற்று கைது செய்திருக்கிறார்கள்.

இதனிடையே கோவிலில் உண்டியலை திருடிச் செல்லும் திருடனின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

From around the web