மறுபடியும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் ! மீண்டும் லாக் டவுன் ?

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை சில வாரங்களாக சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது . அந்த வகையில் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் 2 வகை கொரோனா வைரஸ் இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் போது புதிய வைரஸ் பரவல் குறித்தும் தெரிவித்துள்ளது.
அதன்படி,இந்தியா முழுவதும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை. 1.17 கோடி.கொரோனாவுக்கான சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார்1.50 லட்சம் பேர். தினமும் உயிரிழப்பவர்களின் சராசரி 92 ஆக குறைந்துள்ளது.தினமும் இந்தியா முழுமைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.19 சதவீதம். அதிலும் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களில் கேரளா மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டுமே 75 சதவீதம் பேர் உள்ளனர். கேரளாவில் 38 % மகாராஷ்டிராவில் 37%, கர்நாடகாவில் 4%, தமிழகத்தில் 2.78 % உள்ளனர்.
இன்று வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.17கோடி பேர். இந்தியாவில் இதுவரை 187 பேருக்கு பிரிட்டன் வகை கொரோனா தொற்றும், 6 பேருக்கு தென் ஆப்பிரிக்க வகை கொரோனா தொற்றும், ஒருவருக்கு பிரேசில் வகை கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், கேரளா மற்றும் தெலங்கானாவில் புதிதாக இருவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு இந்த வகைகள் கொரோனாதான் காரணம் என்று சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.