உஜ்ஜெயினில் மாடு மேய்ப்பதில் தகராறு... 26 வயது இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்

 
Madhya-Pradesh

மத்திய பிரதேசத்தில் மாடு மேய்ப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறில், 26 வயது இளைஞர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில், கோவிந்த் என்ற இந்த இளைஞர் தனது மாடுகளை வேறொருவரின் நிலத்தில் மேய விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகராறு இருந்து வந்த நிலையில், சமாதானம் பேசலாம் என கூறி 5 பேர் அவரை வீட்டில் இருந்து அழைத்து வந்து சரமாரியாக தடியால் அடித்தனர்.

மயக்கமடைந் அவரை பைக்கில் வைத்து வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஒடியது. கோவிந்தை இந்தூர் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


 

From around the web