5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று வெளியாகிறது..!

 
Election commission

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சூழலில் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்களை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

இதன்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உடன் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3.30 மணிக்கு அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. அதில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படுகிறது. எனவே செய்தியாளர்கள் உரிய கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

From around the web