அனைத்து மதுபானங்களின் விலை 20 சதவீதம் உயர்வு ! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

 
Puducherry

புதுச்சேரியில் அனைத்து மதுபானங்களின் விலையும் இன்று முதல் 20 சதவீதம் உயர்கிறது.

புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளு கடைகள் உள்ளன. புதுவையில் 1,300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனையாகிறது. 2017க்கு பிறகு புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை கடந்த 2019 பிப்ரவரியில் உயர்த்தியது. பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கொரோனா வரி விதிக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு இணையாக மதுபானங்கள் விலை இருந்தன.

இந்த நிலையில் கொரோனா வரி கடந்த மாதம் நீக்கப்பட்டு விலை குறைந்தது. இந்நிலையில் கலால்துறை புதிய உத்தரவை நேற்று இரவு பிறப்பித்தது. கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில், “புதுச்சேரியில் விற்கப்படும் இந்திய தயாரிப்பு அல்லது வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் விலை உயர்வு ஜூலை 15 (இன்று) முதல் அமலுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்டை மாநிலத்திற்கு இணையாக புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்ந்து இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை குறைக்கும் என வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

From around the web