கொரோனா பாதிப்புகளை குறைக்க 100 நாள் செயல் திட்டம்!முதல்வா் அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது . அந்த வகையில் கேரளாவில் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாக கூறப்பட்ட கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
இதுவரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 71,000பேர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த கேரள அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்தும் பொருட்டும், வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டும் சில சலுகைகளை கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
‘சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.100 அதிகரிக்கப்படும். ரேஷன் அட்டைகளுக்கு கூடுதலாக மேலும் 4 மாதங்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவுப்பொருள் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.