ஏழைகளுக்கு பணம் கொடுங்க! பிரதமர் மோடிக்கு ஐஎம்எஃப் பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் அறிவுறுத்தல்!!

இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏழைகளின் கைகளில் நேரடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் உலக நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். தேவைகள் அதிகரித்தால் தான் பொருளாதாரம் வலுப்படும். தேவைகள் அதிகரிக்க மக்களின் கைகளில் பணம் இருக்க வேண்டும். அதைக் கொண்டு அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். மக்களின் கைகளில் பணம் இல்லை என்றால் உற்பத்தி செய்தாலும் அதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது. இந்திய அரசின் நடவடிக்கைகள்
 

ஏழைகளுக்கு பணம் கொடுங்க! பிரதமர் மோடிக்கு ஐஎம்எஃப் பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் அறிவுறுத்தல்!!இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏழைகளின் கைகளில் நேரடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் உலக நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார்.

தேவைகள் அதிகரித்தால் தான் பொருளாதாரம் வலுப்படும். தேவைகள் அதிகரிக்க மக்களின் கைகளில் பணம் இருக்க வேண்டும். அதைக் கொண்டு அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். மக்களின் கைகளில் பணம் இல்லை என்றால் உற்பத்தி செய்தாலும் அதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது.

இந்திய அரசின் நடவடிக்கைகள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருக்கிறது. அதுவும் பொருளாதார நடவடிக்கை தான் என்றாலும், சாமானிய மக்களின் கைகளில் உடனடியாகப் பணம் இருந்தால் தான், அந்தப் பணம் உற்பத்தியாளர்களுக்கு வந்து சேரும். பொருளாதார சுழற்சி ஏற்பட்டு வளர்ச்சி உந்தப்படும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் கீதா கோபிநாத்.

மத்திய அரசு பொதுமக்களுக்கு நேரிடையாக பணம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோரும், பொருளாதார நிபுணர்கள் அபிஜித் சாட்டர்ஜி, ரகுராம் ராஜன் உள்ளிட்டோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில் ஐ.எம்.எஃப் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத்தும் சேர்ந்துள்ளார். இதே நடவடிக்கையை அமெரிக்க அரசு துரிதமாக செயல்படுத்தி குடும்பத்திற்கு 3400 டாலர்கள் வரை  நிதி பட்டுவாடா செய்து முடித்துள்ளனர். அவசரமாக செயல்பட்டதால், இறந்து போனவர்கள் கணக்குகளைக் கூட சரிபார்க்க முடியாமல் அவர்களுக்கும் பணம் அனுப்பி வைத்துள்ளனர். அவசரமான நடவடிக்கை, காலதாமதம் கூடாது என்பதற்காக விரைந்து நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பொருளாதார விதிகள் என்பது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொதுவானது தானே! அமெரிக்காவுடனான உறவை சிலாகித்துப் பேசும் பாஜகவினர் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

From around the web