கோடையை சமாளிக்க ஐடியாக்கள்

தமிழகத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல், மே என்று இருந்த நிலைமை மாறி தற்போது மார்ச்சிலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. பொதுவாக வெயில் காலங்களில் அதிகம் பசியெடுக்காது. வெயில் வாட்டி வதைப்பதால் சோம்பலாகவே இருக்கும். வேலை செய்வதில் நாட்டம் இருக்காது. எரிச்சலுடனேயே நாட்களை தள்ள வேண்டி இருக்கும். இந்த வறட்சியைப் போக்கி நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க சில எளிமையான விஷயங்களை கடைப்பிடித்தாலே போதுமானது. கோடையை கொண்டாடலாம். தினசரி காலை எழுந்தவுடன் முதல் நாள் இரவு
 

கோடையை சமாளிக்க ஐடியாக்கள்மிழகத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல், மே என்று இருந்த நிலைமை மாறி தற்போது மார்ச்சிலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. பொதுவாக வெயில் காலங்களில் அதிகம் பசியெடுக்காது.

வெயில் வாட்டி வதைப்பதால் சோம்பலாகவே இருக்கும். வேலை செய்வதில் நாட்டம் இருக்காது. எரிச்சலுடனேயே நாட்களை தள்ள வேண்டி இருக்கும். இந்த வறட்சியைப் போக்கி நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க சில எளிமையான விஷயங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.

கோடையை கொண்டாடலாம். தினசரி காலை எழுந்தவுடன் முதல் நாள் இரவு சோற்றில் ஊற்றிவைத்த நீரைப் பருகிட அன்றைய நாள் முழுமைக்குமே புத்துணர்ச்சியுடன் வைக்கும். ஆற்று நீர் வாதத்தையும், அருவி நீர் பித்தத்தையும், சோற்றுநீர் இரண்டையுமே போக்கும் என்பது முதுமொழி.

எனவே சோற்று நீர் வாரத்தில் இரண்டு நாட்களும், ஊற வைத்த வெந்தயத்தை வாரத்தில் இரண்டு நாட்களும் சாப்பிட வேண்டும். காலை எழுந்தவுடன் 5 மணி முதல் 7 மணிக்குள்ளாக நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி , மலச்சிக்கல் நீங்குவதோடு, உடல் உஷ்ணத்தையும் சம நிலையில் வைக்கும். செரிமான சக்திக்கு உதவி செய்கிறது.

கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் இவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வாரம் 2 நாட்கள் சாப்பிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.

காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையே தண்ணீர் மட்டுமே குடித்தால் போதுமானது. மதிய உணவில் புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். மதிய உணவிற்குப் பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்த மோரை குடிக்கலாம்.

இரவு உணவை 8 மணிக்கு முன்னமே முடிக்க வேண்டியது அவசியம். மாலை நேரங்களில் மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி இவற்றில் ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக இருந்தாலும், தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர் குடித்து வர தாகம் தணியும்.
தினசரி தலைக்கு குளிக்க வேண்டும். அதிலும் வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

தினசரி இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். குளியல் சோப்பு தவிர்த்து இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்துதல் நலம். கோடை காலங்களில் ஃபோம் மெத்தைகள் தவிர்த்து மொட்டை மாடிகளில் உறங்கலாம். 4 மணி நேரம் முன்னமே தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப் படுத்த வேண்டும்.

மார்க்கெட்டிங் மற்றும் வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையும் வேலை செய்பவர்கள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை முகம் கழுவிக் கொள்ளலாம். அனைவருமே அதிக தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

கோடை காலத்தில் இதயத்திற்கும், சிறுகுடலுக்கும் வேலைகள் அதிகம்.
பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது ,அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை வாழ வழி வகுக்கும்.

http://www.A1TamilNews.com

From around the web