மாஸ்க் போட்டா இப்படிப் போடுங்க! இல்லாட்டி கொரோனாவுடன் போராடுங்க!!

ஊரடங்கு அமல்படுத்த தொடக்க காலத்தில் இளைஞர்கள் சிலர் விளையாட்டாக இருந்தாலும் பெரியவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்து கொரோனா பரவாமல் தடுப்பதற்கு பேருதவியாக இருந்தார்கள். தமிழகத்தில் கொரோனாவும் கட்டுக்குள்ளேயே இருந்தது. கோயம்பேட்டில் சில கவனக்குறைவால் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் அதிகமாகப் பரவத் தொடங்கியது, சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பரவியதோடு, தற்போது கிராமங்களை நோக்கியும் கொரோனா படையெடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழலில், ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து, வெளியே செல்லும் நேரங்களில் முகக்கவசம் அணிந்து,
 

மாஸ்க் போட்டா இப்படிப் போடுங்க! இல்லாட்டி கொரோனாவுடன் போராடுங்க!!ஊரடங்கு அமல்படுத்த தொடக்க காலத்தில் இளைஞர்கள் சிலர் விளையாட்டாக இருந்தாலும் பெரியவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்து கொரோனா பரவாமல் தடுப்பதற்கு பேருதவியாக இருந்தார்கள். தமிழகத்தில் கொரோனாவும் கட்டுக்குள்ளேயே இருந்தது.

கோயம்பேட்டில் சில கவனக்குறைவால் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் அதிகமாகப் பரவத் தொடங்கியது, சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பரவியதோடு, தற்போது கிராமங்களை நோக்கியும் கொரோனா படையெடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

தற்போது உள்ள சூழலில், ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து, வெளியே செல்லும் நேரங்களில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதாலும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதாலும், சானிட்டைசர் உபயோகிப்பதாலும் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

முகக்கவசம் அணிவதில் தான் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஏதோ கழுத்தைச் சுற்றி கர்சீப் போடுவது போல், முகத்திலிருந்து கிழே இறக்குவதும், அப்படியே அதை இழுத்து மேலே போடுவதுமாக பெரும்பாலும் அனைவரும் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் எந்தப் பலனும் இல்லை. கைகளில் ஏதாவது தொற்று இருந்தால் அதை நேரடியாக மூக்குகிற்கு அருகிலேயே கொண்டு சென்று கொரோனாவை உடலுக்குள் அனுப்பும் பணியை நீங்களே செய்கிறீர்கள்.

முகக்கவசம் அணிவதற்கும், அதை கழற்றுவதற்கும் பாதுகாப்பான வழிகள் இருக்கின்றன. பேசும் போதும் முகக்கவசம் அணிந்திருப்பது தான் மிக மிக முக்கியமானதாகும். பேசும் போது தான் தொற்று கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம். பேசும் போது கீழே இறக்கிவிட்டுக் கொள்வதும், பின்னர் மேலே இழுத்து விடுவதுமாக இருந்தால், அதற்கு முக்ககவசம் அணியாமலே இருந்து கொரோனா வந்தால் அதனுடன் போராடிவிட்டுப் போகலாம்.

தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் பிரேம் ஆனந்த், தமிழ் மக்களுக்காக எளிய தமிழில் முகக்கவசம் அணியும் மற்றும் கழற்றும் முறை பற்றி கூறுவதை வீடியோவில் பாருங்கள். பயனடையுங்கள்.

ஊரடங்கு உத்தரவை கடைப்பிடியுங்கள். வெளியே செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள். சமூக இடைவெளியை எப்போதும் கடைப்பிடியுங்கள். விலகியிருப்போம் கொரோனாவை விரட்டியடிப்போம்.

A1TamilNews.com

From around the web