ஊரடங்கு காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது குறைந்திருக்கிறது. பள்ளி,கல்லூரி, அலுவலகம் செல்லும் போது வேளைக்கு உணவு, தூக்கம் இவற்றை சரியாக மேற்கொண்ட மக்கள் தற்போது நடைமுறைகளில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்திலும் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள சில யோசனைகள் ஆறு சுவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவை நன்றாக மென்று கூழாக்கி, நம்முடைய உமிழ்
 

ஊரடங்கு காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது குறைந்திருக்கிறது.

பள்ளி,கல்லூரி, அலுவலகம் செல்லும் போது வேளைக்கு உணவு, தூக்கம் இவற்றை சரியாக மேற்கொண்ட மக்கள் தற்போது நடைமுறைகளில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள சில யோசனைகள் ஆறு சுவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவை நன்றாக மென்று கூழாக்கி, நம்முடைய உமிழ் நீர் உணவுடன் நன்றாக கலந்து பொறுமையாக சாப்பிட வேண்டும். உண்ணும் போது வீண் பேச்சுக்களைத் தவிர்த்து வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும்.

ஸ்பூனை விட உணவை கையாலேயே எடுத்து சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டப்பின் 30 நிமிடமும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.

சம்மணமிட்டு கீழே அமர்ந்து சாப்பிட வேண்டும். குளித்த பிறகு 30 நிமிடங்கள் கழித்தே சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்த பின் 2 மணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
மண்பானைத் தண்ணீரை உபயோகப்படுத்துவது நல்லது.

காலை, இரவு இரு வேளையும் பல் துலக்க வேண்டும். தூங்கும் அறைகளில், படுக்கையில், தலைமாட்டில் செல்போன் வைப்பதை தவிர்க்க வேண்டும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவது நல்லது.

ஊரடங்கில் உடல் வெப்பநிலையை சீராக வைக்கும் எண்ணெய் குளியலை தொடங்கலாம். ஒவ்வொரு நாளையும் குளிர்ச்சியான தண்ணீர் குடித்து ஆரம்பிக்கலாம்.

உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி இவற்றை சரியான நேரத்தில் செய்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

A1TamilNews.com

From around the web