நயன்தாரா, அனுஷ்கா காணாமல் போனால் மட்டும் தான் நடவடிக்கையா? – போலீசை விளாசிய நீதிபதிகள்!

சென்னை: இளம்பெண் காணாமல் போன ஆட்கொணர்வு வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி, காணாமல் போன மகளை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி தனது 19 வயது மகள் காணாமல் போனதாக திருச்செங்கோடு புறநகர் காவால் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனது மகளை மீட்டுத் தருமாரும் கோரியிருந்தார் இந்த மனு
 

நயன்தாரா, அனுஷ்கா காணாமல் போனால் மட்டும் தான் நடவடிக்கையா? – போலீசை விளாசிய நீதிபதிகள்!சென்னை: இளம்பெண் காணாமல் போன ஆட்கொணர்வு வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி, காணாமல் போன மகளை மீட்டுத் தருமாறு சென்னை  உயர்நீதிமன்றத்தில்  தன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த பிப்ரவரி 14ம்  தேதி தனது 19 வயது மகள் காணாமல் போனதாக திருச்செங்கோடு புறநகர் காவால் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனது மகளை மீட்டுத் தருமாரும் கோரியிருந்தார்

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வுக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு தொடர்பான விவரங்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து அனுப்பப் பட்டதாகவும், இன்னும் விவரங்கள் வரவில்லை என்று கூறினார் 

இதற்கு  நீதிபதிகள்,  “இது நான்கு மாதங்களுக்கு முன் வந்த கோரிக்கை.  சாதாரண  மக்களென்றால் இவ்வளவு நிதானமாகத் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?  அவர்கள்   வீட்டில் ஒரு பெண் காணாமல் போயிருந்தால் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்வார்களா?  நயன்தாரா, அனுஷ்கா காணாமல் போனால் மட்டும்  நடவடிக்கை எடுப்பார்களா?  வாங்கும் சம்பளத்திற்கு உண்மையுடன் செயல்படவேண்டும் அல்லது  அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும்,” என்று காவல்துறையை எச்சரித்தனர்.  

விசாரணையின் தற்போதைய நிலையை  அறிக்கையாக வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

From around the web