13 மாவட்டங்களில் நீர்நிலைகளின் நிலவரம் என்ன? அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்!

மதுரை: உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவை, தூர் வாரும் பணிகள் குறித்த விவரஙகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. சிவகங்கை டி.புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை இயல்பு நிலைக்கு மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரம் கண்மாய்கள், 3
 
13 மாவட்டங்களில் நீர்நிலைகளின் நிலவரம் என்ன? அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்!மதுரை:  உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவை, தூர் வாரும் பணிகள் குறித்த விவரஙகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

சிவகங்கை டி.புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை இயல்பு நிலைக்கு மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

“சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரம் கண்மாய்கள், 3 ஆயிரம் குளங்கள் மற்றும் 10 சிற்றாறுகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, அனுமதியில்லாமல் மணல் அள்ளப்படுகிறது.  சீமை கருவேல மரங்களும் அதிகளவில் உள்ளது. மழை காலத்தில் சிற்றாறுகளின் நீர் குளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் மழைநீரையும் சேமிக்க முடியாததால் ஆண்டு தோறும் வறட்சி தொடர்கிறது.  மனு கொடுத்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும்,  ஆக்கிரமிப்பு, சீமை கருவேல மரங்களை அகற்றி, சிற்றாறுகளையும் நீர் நிலைகளையும் இயல்பு நிலைக்கு மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், பி.புகழேந்தி பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் எல்லைக்குட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள், அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவை, கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற தூர் வாரும் பணிகளின் செலவுத் தொகை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழக்கு விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் குடிதண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் சூழ்நிலையில், 13 மாவட்டங்களின் நீர் நிலைகள் குறித்த அறிக்கையை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. பொதுப்பணித் துறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிர்வகித்து வருகிறார்.

– வணக்கம் இந்தியா

From around the web