புதுச்சேரியில் கிரண்பேடிக்கு தடை நீடிப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கையில் துணை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நடவடிக்கைகளில் துணை ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு இருந்து வந்தது. அமைச்சரவை முடிவுகளை மீறி தனது உத்தரவுகள் படி ஆட்சியை நடத்தி வந்தார். இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் , எம்.எல்.ஏ லட்சுமிகாந்த வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் தீர்ப்பில் அன்றாட அரசு அலுவல்களில் துணை
 

புதுச்சேரியில் கிரண்பேடிக்கு தடை நீடிப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு!டெல்லி: புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கையில் துணை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நடவடிக்கைகளில் துணை ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு இருந்து வந்தது. அமைச்சரவை முடிவுகளை மீறி தனது உத்தரவுகள் படி ஆட்சியை நடத்தி வந்தார். இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் , எம்.எல்.ஏ லட்சுமிகாந்த வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கின் தீர்ப்பில் அன்றாட அரசு அலுவல்களில் துணை ஆளுநர் தலையிடக்கூடாது, அரசு நடவடிக்கையில் தலையிடும் அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு  தடை கேட்டும், மேல் முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தின் கோடைகால அமர்வில் மத்திய அரசின் சார்பில் கிரண் பேடிக்காக தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்கள். எதிர் தரப்பினர் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் ஜூன் 7ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் நிதி தொடர்பான முடிவுகளை செயல்படுத்தவும் தடை விதித்துள்ளார்கள். தீர்ப்பு பற்றி முதல்வர் நாராயணசாமி, “மீண்டும் நீதி நிலைநாட்டப் பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

 

From around the web