நீட் தேர்வு ஆள்மாறாட்டம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் கேள்விக் கணைகள்!

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, “மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு நடைபெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது,” என்று கூறினார்கள். பின்னர் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். நீட் தேர்வில் இன்னும் எத்தனை
 

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை  கலந்தாய்வு மூலம் நிரப்பக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, “மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு நடைபெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது,” என்று கூறினார்கள்.

பின்னர் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். நீட் தேர்வில் இன்னும் எத்தனை பேர் ஆள் மாறாட்டம் செய்துள்ளார்கள் என்று தெரியுமா?. நீட் தேர்வு எழுதியவரும், கல்லூரியில் சேருபவரும் ஒருவர் தானா என்ற சோதனை நடத்தப்பட்டதா?.

உதித் சூர்யா மோசடியில் ஈடுபட்டது தெரிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தாரா கல்லூரி முதல்வர் அல்லது உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை என்பது உண்மைதானா?. நீட் ஆள் மாறாட்ட வழக்கு எந்த நிலையில் உள்ளது. 

நீட் தேர்வின் போது உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் பின்பற்றுகிறார்களா? என்று பல்வேறு கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பியுள்ளார்கள். இது தொடர்பான் பதில்களை மறுநாளே(இன்று செப்டம்பர் 26) தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்கள். 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. உதித் சூர்யாவுக்கு முன் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

 

From around the web