மகிழ்ச்சி! நாளை முதல் ஹெச்1 பி, க்ரீன்கார்டு துரித சேவை தொடக்கம்!!

ஜூன் 1ம் தேதி முதல் க்ரீன்கார்டுக்கான I140 படிவத்தின் துரித சேவை(Premium Process) தொடங்கப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை(USCIS) அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 8ம் தேதி முதல் ஹெச்1 பி விசாவுக்கான விண்ணப்பங்களுக்கு துரித சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஹெச்1 பி விசா இருந்து கால நீட்டிப்புக்கு விண்ணப்பித்தவர்கள், இந்த ஆண்டுக்கான ஹெச்1 பி விசா கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு இந்த துரித சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். துரித சேவைக்கான கூடுதல்
 

மகிழ்ச்சி! நாளை முதல் ஹெச்1 பி, க்ரீன்கார்டு துரித சேவை தொடக்கம்!!ஜூன் 1ம் தேதி முதல் க்ரீன்கார்டுக்கான I140 படிவத்தின் துரித சேவை(Premium Process) தொடங்கப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை(USCIS) அறிவித்துள்ளது.

மேலும் ஜூன் 8ம் தேதி முதல் ஹெச்1 பி விசாவுக்கான விண்ணப்பங்களுக்கு துரித சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஹெச்1 பி விசா இருந்து கால நீட்டிப்புக்கு விண்ணப்பித்தவர்கள், இந்த ஆண்டுக்கான ஹெச்1 பி விசா கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு இந்த துரித சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

துரித சேவைக்கான கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது, 15 நாட்களுக்குள் விசா தொடர்பான முடிவுகள் அல்லது கூடுதல் தகவல் கேட்கும் கடிதம் அனுப்பி வைக்கப்படும். கொரோனாவினால் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், ஹெச்1 பி விசா நீட்டிப்புக்காக பலரும் காத்திருக்க நேரிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஹெச்1 பி விசா கோட்டா ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியிருந்தாலும், அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு தான் அமெரிக்காவுக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்படும். துரித சேவை மூலம் விரைவில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அமெரிக்க தூதரகங்களில் விண்ணப்பித்து பாஸ்போர்ட்டில் முத்திரை பெற்று, அக்டோபர் 1ம் தேதி அமெரிக்காவுக்கு வர முடியும்.

ஹெச்1 பி விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப்-க்கு குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த துரித சேவை அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

A1TamilNews.com

From around the web