குஜராத் “குடிசை மறைப்புச் சுவர்” மாடலும் தமிழ்நாடு திராவிட மாடலும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் அரசு முறைப் பயணத்தை ஒட்டி, குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் “நமஸ்தே ட்ரம்ப்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கும் அதிபர் ட்ரம்ப் வருகை தந்திருந்தார். அதிபர் ட்ரம்பின் வருகையை முன்னிட்டு, அவருடைய வாகனம் செல்லும் வழியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைக்க தடுப்புச் சுவர் கட்டியுள்ளார்கள். குஜராத் மாடல் என்று மார்தட்டிக் கொண்ட மோடியின் குஜராத்தில் இப்படி ஒரு நிலையா என்று உலக அளவில் விவாதப்
 

குஜராத் “குடிசை மறைப்புச் சுவர்” மாடலும் தமிழ்நாடு திராவிட மாடலும்!மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் அரசு முறைப் பயணத்தை ஒட்டி, குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் “நமஸ்தே ட்ரம்ப்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கும் அதிபர் ட்ரம்ப் வருகை தந்திருந்தார்.

அதிபர் ட்ரம்பின் வருகையை முன்னிட்டு, அவருடைய வாகனம் செல்லும் வழியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைக்க தடுப்புச் சுவர் கட்டியுள்ளார்கள். குஜராத் மாடல் என்று மார்தட்டிக் கொண்ட மோடியின் குஜராத்தில் இப்படி ஒரு நிலையா என்று உலக அளவில் விவாதப் பொருளாகியது.

இது குறித்து திமுக ஐடி பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் புதுக்கோட்டை அப்துல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

“அமெரிக்காவில் உள்ள சாலைகள், சிங்கப்பூரில் உள்ள கட்டிடங்கள், சீனாவில் உள்ள பஸ்ஸ்டாண்ட் இவற்றையெல்லாம் குஜராத்தில் தான் கட்டியதாக ஃபோட்டோஷாப்பில் காட்டி பிரதமரானார் மோடி!!

இந்தியாவையும் அமெரிக்கா போல மாற்றுவார் மோடி! குஜராத் மாடல்! வளர்ந்த குஜராத்!!” என்றெல்லாம் புல்லரித்து மகிழ்ந்தனர் சங்கி கும்பல்.

காலம் எப்போதும் பொல்லாதது! எந்த குஜராத்தை மோடி அமெரிக்கா போல மாற்றிவிட்டார் என்று சொன்னார்களோ அதே குஜராத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிறார். அங்குள்ள குடிசைகளும், சாக்கடைகளும், அழுக்கான ஊர்புறமும், “படியளக்கும் புண்ணியவான்” டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சாலையின் இருபுறமும் மைல் கணக்கில் சுவர் கட்டுகிறார் மோடி!!!!

இதே தமிழ்நாட்டிற்கு உலகின் சக்தி வாய்ந்த மற்றொரு நாடான சைனாவின் அதிபர் சில மாதங்களுக்கு முன்னர் வந்தார். சென்னை விமான நிலையம் துவங்கி அவர் சென்ற மகாபலிபுரம் வரை “பொறியியல் அதிசயமான” கத்திப்பாரா பட்டர்ஃபிளை மேம்பாலம், ஐஐடி மேம்பாலம், டைட்டல்பார்க் கணிணி பூங்கா , சிறுசேரி ஐ.டி பார்க், ஓ. எம். ஆர் விரைவு சாலையின் இருபுறமும் வானளாவி உயர்ந்து நிற்கும் விண் முட்டும் கட்டிடங்கள் , கண்ணாடி மாளிகைகள், பல்கலைக் கழகங்கள் என “திமுக ஆட்சியால்” உருவான திட்டங்களால் நிறைந்து இருந்தன. எந்த இடத்திலும் சுவர் எழுப்பி மறைக்க வேண்டிய அவசியம் இன்றி கெளரவமாக அழைத்து வரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார் சீன அதிபர். # எங்கள் திராவிட மாடல்”

இவ்வாறு புதுக்கோட்டை அப்துல்லா, குஜராத் மாடலையும் திமுக அரசின் திட்டங்களையும் ஒப்பிட்டு குறிப்பிட்டுள்ளார்.

http://www.A1TamilNews.com

From around the web