பாலைவனம் விளைநிலங்கள் ஆகுமா? – மத்திய அரசின் முயற்சி!

டெல்லி: இந்தியாவில் 50 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு விளைநிலமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின், உலகம் பாலைவனமாவதைத் தடுக்கும் 14 ஆவது மாநாடு, UNCCD-COP 14(Unoted Nation Convention to Combat Desertification -Conference of the Parties 14) டெல்லியில் செப்டம்பர் 2 முதல் 13 வரை நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதும் 196 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், அரசாங்க மற்றும் என்.ஜி.ஓ வில்
 

பாலைவனம் விளைநிலங்கள் ஆகுமா? – மத்திய அரசின் முயற்சி!

டெல்லி: இந்தியாவில் 50 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு விளைநிலமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின், உலகம் பாலைவனமாவதைத் தடுக்கும் 14 ஆவது மாநாடு, UNCCD-COP 14(Unoted Nation Convention to Combat Desertification -Conference of the Parties 14) டெல்லியில் செப்டம்பர் 2 முதல் 13 வரை நடைபெற உள்ளது.

இதில் உலகம் முழுவதும் 196 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், அரசாங்க மற்றும் என்.ஜி.ஓ வில் முக்கிய பதவி வகிப்பவர்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாடு குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“உலகம் படிப்படியாகப் பாலைவனம் ஆகிக் கொண்டும் இருக்கிறது. இந்த பாலைவனமாக்கலினால், 250 மில்லியன் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் பூமியின் மூன்றில் ஒரு பகுதி பாதிப்படைந்துள்ளது.

இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாத 50 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு விளைநிலமாக மாற்றப்படும் .டெராடூனில் இதற்கான சிறப்பு மைய அலுவலகம் அமைக்கப்படும்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தேவைப்படும் இடங்களில் நிலங்களை சீராக்க கருவிகள் வழங்குவது, நில மேலாண்மைக்கு உதவுவது, 1.3 பில்லியன் ஹெக்டேர் நிலத்தை நம்பி உள்ள மக்கள் மீது கவனம் செலுத்தி அவர்களின் நிலங்களை மீட்டு எடுத்து உலகம் பாலைவனமாவதை தடுப்பதாகும்.

மற்ற நாடுகளின் துணையோடு, இதற்கான முயற்சிகளை இந்தியா முன்னின்று எடுக்கும். நமது சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்,” என்று கூறினார்.

– வணக்கம் இந்தியா

From around the web