அரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்!போக்குவரத்து கழகம் அறிவிப்பு.!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த போதிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் தனியார் பேருந்து சேவைகள் இன்னும் இயக்கப்படவில்லை. பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல திண்டாடி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்
 

அரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்!போக்குவரத்து கழகம் அறிவிப்பு.!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த போதிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் தனியார் பேருந்து சேவைகள் இன்னும் இயக்கப்படவில்லை.

பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல திண்டாடி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பேருந்தை வாடகைக்கு எடுக்க ,செல்ல வேண்டிய இடங்கள், இ-பாஸ் அனுமதி போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான இடங்களுக்கு கிலோமீட்டருக்கு 55 ரூபாயும்,சமதள சாலைகளில் செல்ல கிலோமீட்டருக்கு 45 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web