தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி! சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்தாலும் இந்தியாவில் மட்டும் குறைவதே இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

பெட்ரோல், டீசல் போன்றே தங்கம், வெள்ளி விலைகளையும் சர்வதேச சந்தையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும் என்று இது நாள் வரையில் கூறப்பட்டு வந்தாலும் தற்போது உலக நாடுகள் முழுவதுமே கொரோனா பயத்தில் உறைந்துள்ளன. எவ்வளவு தான் கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே நீண்ட க்யூவில் பல மணி நேரங்களில் காத்திருக்கும் நிலை தான் இன்று வரையிலும் பல நாடுகளில் இருக்கின்றது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே தங்கத்தை எந்த நாட்டிலும் பெரிதாக யாரும் மதித்ததாகத் தெரியவில்லை.
 

தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி! சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்தாலும் இந்தியாவில் மட்டும் குறைவதே இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

பெட்ரோல், டீசல் போன்றே தங்கம், வெள்ளி விலைகளையும் சர்வதேச சந்தையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும் என்று இது நாள் வரையில் கூறப்பட்டு வந்தாலும் தற்போது உலக நாடுகள் முழுவதுமே கொரோனா பயத்தில் உறைந்துள்ளன.

எவ்வளவு தான் கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே நீண்ட க்யூவில் பல மணி நேரங்களில் காத்திருக்கும் நிலை தான் இன்று வரையிலும் பல நாடுகளில் இருக்கின்றது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே தங்கத்தை எந்த நாட்டிலும் பெரிதாக யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. பெருமளவில் தங்கம் வாங்குவதற்கும் பொதுமக்களும் கடந்த சில வாரங்களாகவே ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமில்லை. இத்தனைக்கும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிலை ஏப்ரல் 14ம் தேதி வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், நாடு முழுவதும் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டே இருக்கின்றன.

ஆனாலும் தங்கத்தின் விலை இன்னும் அதிரடியாக குறையாமல் இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. அதே போன்று சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் 0.69% குறைந்து 14.553 டாலர்களாக வர்த்தகமாகி வந்தாலும் இந்தியாவில் வெள்ளியின் விலையிலும் பெருமளவில் மாற்றமில்லாதது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.

A1TamilNews.com

From around the web