அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தங்கமும், வெள்ளியுமாக குவிகிறது நன்கொடை!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் மேற்பார்வையில் நடைபெற இருக்கிறது. அதன் முதல் கட்டமாக கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்டு 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்நிலையில் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு நன்கொடைகள் குவிந்து வருகின்றன. கோவில் கட்டுமான பணிக்கு ரூ.500 கோடி முதல் ரூ.800 கோடிவரை தேவைப்படும் என்று கட்டுமான நிறுவனங்கள் முதல்கட்டமாக
 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட  தங்கமும், வெள்ளியுமாக குவிகிறது நன்கொடை!யோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் மேற்பார்வையில் நடைபெற இருக்கிறது.

அதன் முதல் கட்டமாக கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்டு 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்நிலையில் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு நன்கொடைகள் குவிந்து வருகின்றன.

கோவில் கட்டுமான பணிக்கு ரூ.500 கோடி முதல் ரூ.800 கோடிவரை தேவைப்படும் என்று கட்டுமான நிறுவனங்கள் முதல்கட்டமாக மதிப்பிட்டுள்ளன. ஒருவேளை, கோவில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டால், கட்டுமான செலவும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன.

பிப்ரவரி வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கை மட்டும்ரூ.11 கோடி. இந்தத் தொகை நிரந்தர வைப்புநிதியில் போடப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம், வெள்ளி மற்றும் நகைகளும் பல கோடி ரூபாய்க்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி பூஜைக்கு 1 கிலோதங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்குவதாக ஐதராபாத்தை நகை வியாபாரி அறிவித்திருந்தார். உத்தரபிரதேச தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கம், சமீபத்தில் ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு 34 கிலோ வெள்ளி வழங்கி உள்ளது. அறக்கட்டளை தலைவர் 5 வெள்ளி செங்கற்களை வழங்கி உள்ளார்.

மேலும், உத்தரபிரதேச மாநில முதல்மந்திரிபாபா ராம்தேவ் உள்ளிட்ட பக்தர்களும், பிரபலமான துறவிகளும் மற்றும் பலரும் தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். இதுவரை ரொக்கமாக ரூ.22 கோடியும், ஏராளமான தங்கமும், வெள்ளி செங்கற்களும் நன்கொடையாக குவிந்திருக்கின்றன என அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web