ஊழலை ஒழிப்பேன் – புதிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39ஆவது தலைவராக சவுரவ் கங்குலி பதவி ஏற்றுக்கொண்டார். ஊழல் இல்லாமல் நிர்வாகம் செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளார். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார். மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் முறையாக பதவி ஏற்றார். இதன் மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. பிசிசிஐயின் செயலாளராக உள் துறை
 

ஊழலை ஒழிப்பேன் – புதிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி!ந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39ஆவது தலைவராக சவுரவ் கங்குலி பதவி ஏற்றுக்கொண்டார். ஊழல் இல்லாமல் நிர்வாகம் செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளார்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார். மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் முறையாக பதவி ஏற்றார். இதன் மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது.

பிசிசிஐயின் செயலாளராக உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் துணைத் தலைவராக உத்தரகாண்டைச் சேர்ந்த மாஹிம் வர்மாவும் பொறுப்பேற்றனர்.பிசிசிஐயின் முன்னாள் ‌தலைவரும் மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமல் பொருளாளராகவும் இணைச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ஜயிஷ் ஜார்ஜும் பொறுப்பேற்றனர்.

நிர்வாக சீர்திருத்தத்துடன் ஊழல் இல்லாத அமைப்பாக கிரிக்கெட் வாரியத்தை செயல்படுத்துவேன். இந்திய அணியை நான் அப்படியே வழிநடத்தினேன். அதே போல் கிரிக்கெட் வாரியத்தையும் வழி நடத்துவேன் என்று கங்குலி கூறியுள்ளார்.

இதனிடையே, கங்குலி மேற்குவங்க மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.பிசிசிஐவின் விதிகளின்படி ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்து பதவி வகிக்க முடியும் என்ற விதிமுறையின் படி கங்குலி அடுத்த 10 மாதங்களுக்கு மட்டுமே பிசிசிஐயின் தலைவராக கங்குலி பதவி வகிக்க முடியும்.

அதன்படி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி பொறுப்பு வகிக்க இருக்கிறார்.

– வணக்கம் இந்தியா

From around the web