இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கோவை மாவட்டத்தில் சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள் பால்
 

இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கோவை மாவட்டத்தில் சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள் பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்படும். எந்தவிதத் தளர்வுகளும் கிடையாது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவர் சந்தைகள்,காய்கறி மார்க்கெட்,மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web