தலைநகரில் உல்லாசமாய் திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சொகுசுப் பேருந்துகளில் சுற்றித் திரிகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருக்கிறது. சுற்றுலா வழிகாட்டியுடன் இரண்டு பேருந்துகளில் உத்தரகாண்ட்டின் டேராடூனிலிருந்து டெல்லியை சுற்றிப் பார்க்க வந்திருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். டெல்லியின் அனைத்து
 

தலைநகரில் உல்லாசமாய் திரியும்  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சொகுசுப் பேருந்துகளில் சுற்றித் திரிகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருக்கிறது.

சுற்றுலா வழிகாட்டியுடன் இரண்டு பேருந்துகளில் உத்தரகாண்ட்டின் டேராடூனிலிருந்து டெல்லியை சுற்றிப் பார்க்க வந்திருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

டெல்லியின் அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டிருக்கும் வேளையில் சுமார் 100 பயணிகளுக்கான அனுமதி உத்தரவை வழங்கியது யார் என்ற கேள்விக்கு விடை இல்லை.

கொரோனா பரவல் அச்சத்தில் நாடே லாக்டவுனில் இருக்கும் போது சட்டம், பாதுகாப்பு, நடவடிக்கைகள் எல்லாம் எதற்கு என்று தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பு தெரிவிக்கிறது.

விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. ஏர்ப்போர்ட்டிற்குச் செல்கிறோம் என்கின்றனர். காவல்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டதற்கு மேலிடத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் என்ற பதில் யாரைக் குறிக்கிறது? மக்களை ஏமாற்றும் வேலையா இந்த ஊரடங்கு என்று சரமாரியாக கேள்விக்கணைகள் அரசை நோக்கி வைக்கப்படுகின்றன.

ஏற்கனவே டெல்லி தப்லீக் முஸ்லீம் மாநாடு சர்ச்சைகளே முடிவடையாத போது 100 பயணிகள் ஒரே பேருந்தில் எப்படி சாத்தியம்.? இவர்களிடம் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடன் முடிவடைகிறது தொலைக்காட்சி செய்தித் தொகுப்பு.

A1TamilNews.com

From around the web