திரையுலக வரலாற்றில் முதல் முறையாக டீசருக்கே தியேட்டர் லிஸ்ட் வெளியீடு! #2Point0 #Rajinikanth

ரஜினிகாந்த் நடிப்பிலஸ் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரமாண்டமான படத்தின் முதல் டீசர் நாளை காலை 9.30 மணிக்கு தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த டீசரை 3டியில் பார்க்க வசதியாக தியேட்டர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், தஞ்சை, நெல்லை, கோவை என அனைத்து நகரங்களில் உள்ள குறிப்பிட்ட தியேட்டர்களில் இலவசமாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு டீசரைப் பார்க்கலாம். மேலும் நாளை வெளியாகும் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் இடைவேளையிலும் இந்த 2.0
 

திரையுலக வரலாற்றில் முதல் முறையாக டீசருக்கே தியேட்டர் லிஸ்ட் வெளியீடு! #2Point0 #Rajinikanth

ஜினிகாந்த் நடிப்பிலஸ் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரமாண்டமான படத்தின் முதல் டீசர் நாளை காலை 9.30 மணிக்கு தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த டீசரை 3டியில் பார்க்க வசதியாக தியேட்டர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், தஞ்சை, நெல்லை, கோவை என அனைத்து நகரங்களில் உள்ள குறிப்பிட்ட தியேட்டர்களில் இலவசமாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு டீசரைப் பார்க்கலாம்.

மேலும் நாளை வெளியாகும் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் இடைவேளையிலும் இந்த 2.0 டீசரைக் காணலாம்.

இந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் கூட வேறு எந்த பெரிய படத்துக்கும் டீசர் வெளியீட்டுக்கு தியேட்டர் லிஸ்ட் வெளியிட்டதில்லை. அந்தப் பெருமை 2.0 படத்துக்குக் கிடைத்துள்ளது. மேலும் இந்தியாவின் முதல் 3 டி டீசர் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குத்தான்.

ரூ 542 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய சினிமாவின் மிக அதிக பட்ஜெட் படமான 2.0 வரும் நவம்பர் மாதம் 29-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web