முதல் ரஃபேல் போர் விமானம் வந்தாச்சு! விமானப்படைக்கு பிறந்தநாள் பரிசு..

போர்டோ(பிரான்ஸ்): இந்திய விமானப்படையில் சேரும் முதல் ரஃபேல் விமானத்தை இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். பிரான்ஸில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி, பிரான்ஸ் ராணுவ அதிகாரிகள் , தஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் பதுரியாவின் பெயர்ச் சுருக்கமாக ஆர்பி என்ற எழுத்துக்கள் விமானத்தின் குறியீட்டு எண்ணுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் 87வது பிறந்தநாள் விழாவின் போது ரஃபேல் விமானம் இந்தியப்படையில் சேர்ந்துள்ளது
 

முதல் ரஃபேல் போர் விமானம் வந்தாச்சு! விமானப்படைக்கு பிறந்தநாள் பரிசு..போர்டோ(பிரான்ஸ்): இந்திய விமானப்படையில் சேரும் முதல் ரஃபேல் விமானத்தை இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார்.

பிரான்ஸில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி, பிரான்ஸ் ராணுவ அதிகாரிகள் , தஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் பதுரியாவின் பெயர்ச் சுருக்கமாக ஆர்பி என்ற எழுத்துக்கள் விமானத்தின் குறியீட்டு எண்ணுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் 87வது பிறந்தநாள் விழாவின் போது ரஃபேல் விமானம் இந்தியப்படையில் சேர்ந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது.

மூன்று நாட்கள் பயணமாக பிரான்ஸ் வந்துள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பேச்சுவார்த்தையாக அமைந்தது என்று ராஜ்நாத்சிங் குறிப்பிட்டுள்ளார்.

முதல் ரஃபேல் போர் விமானம் வந்தாச்சு! விமானப்படைக்கு பிறந்தநாள் பரிசு..

ஆயுதபூஜையை முன்னிட்டு சம்பிரதாய பூஜைகள் செய்து விட்டு, ரஃபேல் விமானத்தில், விமானியுடன் ஒரு சுற்று பறந்து சென்று வந்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்த 36 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தத்தின்படி முதல் விமானம்  வந்துள்ளது. மீதி 35  விமானங்கள் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web