ஒரு வேளை ரோபோ ஆகிட்டீங்கன்னா உங்க பெயர் என்ன தெரியுமா? சிட்டியை கேளூங்க!

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிக்கும் 2.0 பட வெளீயிட்டுக்கான ப்ரோமஷன் வேலைகள் பரபரப்பாக தொடங்கியுள்ளன. நாளை ட்ரெய்லர் வெளீயீடு தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்பெஷல் பேட்டி என ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அதிரடி திட்டத்துடன் இயக்குனர் ஷங்கர் பம்பரமாக சுழல்கிறார். நீங்க ரோபோ ஆனால் உங்க பெயர் என்ன தெரியுமா? என்று ஒரு அட்டவணையை வெளியிட்டுள்ளார்கள். இதன் படி பிறந்த தேதிக்கு முதல் பெயரும்
 
ஒரு வேளை ரோபோ ஆகிட்டீங்கன்னா உங்க பெயர் என்ன தெரியுமா? சிட்டியை கேளூங்க!
 
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிக்கும் 2.0 பட வெளீயிட்டுக்கான ப்ரோமஷன் வேலைகள் பரபரப்பாக தொடங்கியுள்ளன.
 
நாளை ட்ரெய்லர் வெளீயீடு தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்பெஷல் பேட்டி என ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அதிரடி திட்டத்துடன் இயக்குனர் ஷங்கர் பம்பரமாக சுழல்கிறார். 
 
நீங்க ரோபோ ஆனால் உங்க பெயர் என்ன தெரியுமா?  என்று ஒரு அட்டவணையை  வெளியிட்டுள்ளார்கள். இதன் படி பிறந்த தேதிக்கு முதல் பெயரும் , பிறந்த மாதத்திற்கு கடைசிப் பெயரும் என மேல் நாட்டு வழக்கப்படி முதல், கடைசிப் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.
 
ஆல்ஃபா, ஃபிங்கி,  பீட்டா , சக், சோஃபி, மெர்க்குரி என சயிண்டிஃபிக், மேல்நாட்டு பெயர்களுடன், குழந்தை, அருமை,  புயல், குமார், பாபு, சுப்ரமணி என்ற தமிழ்ப் பெயர்களும் உண்டு. பாடல்கள் மூலம் தமிழர்களுக்கு பரிச்சயமான அமிகோ என்ற ஸ்பானிஷ் வார்த்தையும் இடம் பெற்றுள்ளது.
 
ரசிகர்கள் தங்கள் ரோபோ பெயரை கண்டு பிடித்து நண்பர்களுடனும், சக ரசிகர்களுடனும் குதூகலத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.
 
– வணக்கம் இந்தியா

From around the web