தமிழக கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணங்கள் எவ்வளவு? முழு விவரம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 25 தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ 13,600 மட்டுமே. தாழ்த்தப்பட்ட / பழங்குடி பிரிவு மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை
 


சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 25 தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ 13,600 மட்டுமே. தாழ்த்தப்பட்ட / பழங்குடி பிரிவு மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை உண்டு. சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர ரூ 11600 மட்டும் செலுத்த வேண்டும்.

கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரியில் சேர ரூ 1 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் ராஜா அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் சேர ரூ 5.54 லட்சம், பல் மருத்துவக் கல்லூரியில் சேர ரூ 3.50 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணமாக ரூ 3.85 லட்சம் முதல் 4 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவப் படிப்புக்கு ரூ 2.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ 12.50 லட்சமும், பிடிஎஸ் படிப்புக்கு ரூ 6 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்

நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் மருத்துவப் படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ 21 முதல் 234 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிடிஎஸ் படிப்புக்கு ரூ 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web