ஒரே நொடியில் 1000 படங்களை டவுன்லோடு செய்யலாம்! அதிவேக இண்டர்நெட் கண்டுபிடிப்பு!

தொலைத்தொடர்புத் துறையில் இண்டர்நெட்டின் இணைப்பு மிக அவசியம். இணையம் இல்லாத வாழ்க்கையை தற்போதைய மனிதனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஊரடங்கு நேரத்திலும் உலக மக்கள் அனைவரும் உயிர்ப்புடன் இயங்கி வருவது இணையத்தால் தான் என்றால் மிகையில்லை. இண்டர்நெட் வேகத்தை இதுவரை 2ஜி என ஆரம்பித்து தற்போது 5ஜி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு நொடிக்கு 1000 HD திரைப்படங்களை டவுன்லோடு செய்யும் அளவிற்கு இண்டர்நெட் வேகத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. மொனாஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் RMIT
 

ஒரே நொடியில் 1000 படங்களை டவுன்லோடு செய்யலாம்! அதிவேக இண்டர்நெட் கண்டுபிடிப்பு!தொலைத்தொடர்புத் துறையில் இண்டர்நெட்டின் இணைப்பு மிக அவசியம். இணையம் இல்லாத வாழ்க்கையை தற்போதைய மனிதனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஊரடங்கு நேரத்திலும் உலக மக்கள் அனைவரும் உயிர்ப்புடன்  இயங்கி வருவது இணையத்தால் தான் என்றால் மிகையில்லை.

இண்டர்நெட் வேகத்தை இதுவரை  2ஜி என ஆரம்பித்து தற்போது 5ஜி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது  ஒரு நொடிக்கு 1000 HD திரைப்படங்களை டவுன்லோடு  செய்யும் அளவிற்கு இண்டர்நெட் வேகத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மொனாஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் RMIT ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.  இந்த இணையம் நொடிக்கு 44.2 டெரா பைட்ஸ் ( TBps) வேகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுவாக இணைய வேகத்திற்கு  லேசர்கள் பயன்படுத்தப்படும்.  ஆனால் புதிய இணையத்தில் லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்கிற புதிய சாதனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் தழுவிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

A1TamilNews.com

From around the web