விவசாயிகள் கடன் தள்ளுபடி?

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேரக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகளைப் பொறுத்தவரை, அறுவடை செய்த பல காய்கறிகள், பழங்கள், பூக்கள் இவற்றை விற்பனை செய்ய வழி இல்லாமல் வீடுகளில் விவசாயிகள் . தினசரி கோடிக்கணக்கில் வியாபாரமாகின்ற மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்கள் செடிகளிலேயே வாடி கொண்டிருக்கின்றன. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படும் தக்காளி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 60
 

விவசாயிகள் கடன் தள்ளுபடி?கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேரக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகளைப் பொறுத்தவரை, அறுவடை செய்த பல காய்கறிகள், பழங்கள், பூக்கள் இவற்றை விற்பனை செய்ய வழி இல்லாமல் வீடுகளில் விவசாயிகள் . தினசரி கோடிக்கணக்கில் வியாபாரமாகின்ற மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்கள் செடிகளிலேயே வாடி கொண்டிருக்கின்றன.

ஒரு கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படும் தக்காளி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதே போல் பால் வியாபாரிகள் பாலை கறந்து கீழே ஊற்றும் அவலமும் உருவாகியுள்ளது.

அரசினுடைய வழிகாட்டுதல்களில் இருக்கும் நடைமுறை சிக்கல்களால் ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகிறது. தமிழகத்திலே உற்பத்தியாகின்ற காய்கறிகள், மலர்கள், முட்டை போன்ற பொருட்கள் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் பக்கத்து மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும்.

நடவடிக்கைகள் தாமதமானால் கடன் வாங்கி செய்த விவசாயம் அத்தனையும் வீணாகப் போகும். கடனை திருப்பி செலுத்த வழி இல்லை. இதனால் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடனும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

A1TamilNews.com

From around the web