“விவசாயி ரயில்” ! இந்தியாவில் முதன்முதலாக ஒரு புதிய ரயில் சேவை !!

நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலையிலும் விவசாய மக்களின் நலனைக் காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயப் பொருட்களை கொண்டு செல்ல விவசாயி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் மகாராஷ்டிராவிலிருந்து பிஹாருக்கு செல்லும். இந்த ரயிலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். விவசாயிகளின் நலனுக்காக வேளாண் பொருட்களை சந்தைகளுக்கு பாதுகாப்பான முறையிலும், அதிவிரைவாகவும் கொண்டு செல்லும் வகையில் இவை தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி விவசாயிகள் விளைவித்த
 

“விவசாயி ரயில்” !  இந்தியாவில் முதன்முதலாக ஒரு புதிய ரயில் சேவை  !!

நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலையிலும் விவசாய மக்களின் நலனைக் காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயப் பொருட்களை கொண்டு செல்ல விவசாயி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் மகாராஷ்டிராவிலிருந்து பிஹாருக்கு செல்லும். இந்த ரயிலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். விவசாயிகளின் நலனுக்காக வேளாண் பொருட்களை சந்தைகளுக்கு பாதுகாப்பான முறையிலும், அதிவிரைவாகவும் கொண்டு செல்லும் வகையில் இவை தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி விவசாயிகள் விளைவித்த அழுகும் தன்மையுடைய வேளாண் பொருட்கள்களான காய்கறிகள் , பழங்கள் , பூக்கள் ஆகியவற்றை உரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல பிரத்யேக கிசான் ரயில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த ரயில் வாரம் ஒருநாள் இயக்கப்படும் . இது 1,519 கி.மீ. பயணம் செய்து பாட்னா, அலகாபாத், கட்னி, சத்னா நகரங்களுக்கு விவசாயப் பொருட்களை கொண்டு செல்லும். இந்த ரயிலின் சேவைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பால், மீன் போன்ற பொருட்களையும் கொண்டு செல்லும் விதத்தில் மேலும் விரிவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web