ZOOM-க்கு போட்டியாக களமிறங்கும் Facebook !

சர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்களும் வீடுகளில் இருந்தபடியே பணிபுரிய தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அலுவலக செயல்பாடுகளுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்த்து ,பேசிக்கொள்வதற்கும் வசதியாக வீடியோ கால் மூலம் நேரத்தை செலவிடுவது அதிகரித்து வருகிறது. இந்த வீடியோ காலுக்காக பெரும்பாலும்
 
ZOOM-க்கு போட்டியாக களமிறங்கும் Facebook !
Facebook symbol is seen on a motherboard in this picture illustration taken April 24, 2020. REUTERS/Dado Ruvic /Illustration

ர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்களும் வீடுகளில் இருந்தபடியே பணிபுரிய தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அலுவலக செயல்பாடுகளுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்த்து ,பேசிக்கொள்வதற்கும் வசதியாக வீடியோ கால் மூலம் நேரத்தை செலவிடுவது அதிகரித்து வருகிறது. இந்த வீடியோ காலுக்காக பெரும்பாலும் சூம் (ZOOM) என்ற செயலி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தகவல்கள் அதிக அளவில் திருடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த காரணத்தால் ZOOM செயலியின் பயன்பாடு வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தனது சாட்டிங் செயலியான மெசேஞ்சரில் ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோவில் உரையாடும் வகையில் புதிய அப்டேட்டை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இந்த மெசெஞ்சரில் ஒரே நேரத்தில் 100 பேருடன் உரையாட முடியும். பயிற்சி வகுப்புகள் நடத்த ஏதுவாகவும், நிறுவனங்கள் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையிலும் இதன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ZOOM ஆப்பை உபயோகிப்பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பயனாளிகளின் குறையை தீர்க்கும் வகையிலும் பேஸ்புக் நிறுவனம் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த முறையில் மெசெஞ்சர் மூலம் ஒரே நேரத்தில் 8 பேர் மட்டுமே உரையாட முடியும். தற்போது பேஸ்புக்கின் மெசெஞ்சர் ஆப்பை அப்டேட் செய்து விட்டால் ஒரே நேரத்தில் 50 பேருடன் பேசி மகிழலாம்.

A1TamilNews.com

From around the web