காஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய எம்.பி.க்கள் இந்தியாவுக்கு ஆதரவு!

காஷ்மீருக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த எம்.பி.க்கள் சட்டவிதி 370 இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். உலகத் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு துணையாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள 23 எம்.பி.க்கள் கொண்ட குழு மேற்கு வங்காளத்தில் ஐந்து தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்திய ராணுவம், போலீஸ் மற்றும் இளம் தன்னார்வலர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். அமைதிக்கான செயல் வடிவம் குறித்து எண்ணங்களை இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம்
 

காஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய எம்.பி.க்கள் இந்தியாவுக்கு ஆதரவு!காஷ்மீருக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த எம்.பி.க்கள் சட்டவிதி 370 இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். உலகத் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு துணையாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள 23 எம்.பி.க்கள் கொண்ட குழு மேற்கு வங்காளத்தில் ஐந்து தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்திய ராணுவம், போலீஸ் மற்றும் இளம் தன்னார்வலர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். அமைதிக்கான செயல் வடிவம் குறித்து எண்ணங்களை இரு தரப்பிலும்  பகிர்ந்து கொண்டோம் என்று ஃப்ரான்ஸ் நாட்டின் எம்.பி ஹென்றி மலோஸே கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், “ஆண்டுக்கணக்கான சண்டைகளுக்குப் பிறகு அமைதி திரும்பியுள்ள ஐரோப்பாவிலிருந்து வருகிறோம். உலகின் மிகவும் அமைதியான நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உலகத் தீவிரவாதத்திற்கு எதிரான  நடவடிக்கைகளுக்கு நாங்கள் இந்தியாவுடன் இணைந்து இருக்க வேண்டும்.  இந்தப் பயணம் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இங்கு  கண்டவற்றை நாங்கள் பரப்புரை செய்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சட்டவிதி 370 ஐ நீக்கி, இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த பிறகு வெளிநாட்டிலிருந்து வந்துள்ள முதல் முக்கிய குழு இது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்க எம்.பி.க்களும்  பத்திரிக்கையாளர்களுடன் காஷ்மீருக்கு வருவதற்கு அனுமதி அளிப்பீர்களா என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

 

From around the web