யார் விளம்பரப்பிரியர்? – இபிஎஸ், மு.க.ஸ்டாலின் மோதல்!

கோவை: மு.க.ஸ்டாலின் விளம்பரப்பிரியர் என்று முதல்வர் இபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்வரை விளம்பரப்பிரியர் என்று நான் சொல்ல மாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். கோயமுத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விளம்பரத்திற்காக மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். ஒரு நாள் போவார். பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து விட்டுப் போய் விடுவார். நாங்கள் எப்போதும் மக்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நீலகரி மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட துணை முதல்வர் செல்கிறார்.
 

கோவை: மு.க.ஸ்டாலின் விளம்பரப்பிரியர் என்று முதல்வர் இபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்வரை விளம்பரப்பிரியர் என்று நான் சொல்ல மாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

கோயமுத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விளம்பரத்திற்காக மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். ஒரு நாள் போவார். பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து விட்டுப் போய் விடுவார். நாங்கள் எப்போதும் மக்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நீலகரி மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட துணை முதல்வர் செல்கிறார். அவருடைய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசிடம் நிவாரணம் கேட்போம்” என்று கூறியுள்ளார்.

முதல்வரின் கருத்து பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட போது,  “முதல்வர் அமெரிக்கா செல்கிறாரே. அது விளம்பரத்திற்காக என்று நான் சொல்ல மாட்டேன். அப்படிச் சொல்லி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள மாட்டேன். 40 ஆண்டுகள் அரசியலில் இருந்து, எம்.எல்.ஏ, சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், திமுக தலைவர் என இருந்து வருகிறேன். எனக்கு எந்த  விளம்பரமும் தேவையில்லை”, என்று பதிலளித்துள்ளார்.

யார் விளம்பரப்பிரியர் என்ற சர்ச்சையில் நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரணம் கிடைத்தால் சரிதான்!

– வணக்கம் இந்தியா

From around the web