பி.எப். செலுத்துவதில் ஊழியர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்!நிறுவனங்களுக்கு விலக்கு கிடையாது!மத்திய நிதி அமைச்சகம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் தொழிற்அசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பி.எஃப் தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும் என நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்தில் இருந்து ஊழியர்களிடம் 12சதவீதமும், நிறுவனத்தின் சார்பில் 12சதவீதமும் பி.எஃப் சந்தா செலுத்தப்பட வேண்டும். ஊழியர்களின் நலனுக்காக மே, ஜூன், ஜூலை, மாதங்களுக்கான பிஎப் தொகையில் நிறுவனங்களின் பங்குத் தொகையான 10 சதவீதம் மட்டும் செலுத்தினாலே போதும் எனவும் ,மீதமுள்ள
 

பி.எப். செலுத்துவதில் ஊழியர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்!நிறுவனங்களுக்கு விலக்கு கிடையாது!மத்திய நிதி அமைச்சகம்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் தொழிற்அசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பி.எஃப் தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும் என நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்தில் இருந்து ஊழியர்களிடம் 12சதவீதமும், நிறுவனத்தின் சார்பில் 12சதவீதமும் பி.எஃப் சந்தா செலுத்தப்பட வேண்டும்.

ஊழியர்களின் நலனுக்காக மே, ஜூன், ஜூலை, மாதங்களுக்கான பிஎப் தொகையில் நிறுவனங்களின் பங்குத் தொகையான 10 சதவீதம் மட்டும் செலுத்தினாலே போதும் எனவும் ,மீதமுள்ள தொகையை மத்திய அரசே செலுத்தும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மத்திய அரசு அதற்காக ரூ.6,750 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தொழிலாளர்கள் கைக்கு கூடுதலாக சம்பள பணம் கிடைக்கலாம் எனவும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

 

From around the web