இப்படிச செய்தால் கொரோனா பரவாது!

கொரோனா வைரஸ் பற்றி சரியான தகவல்களை விட தப்பான தகவல்கள் தான் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சரியான தகவல்களைச் சொல்வது பொறுப்புள்ள ஒவ்வொருவருடைய கடமையாகும். ரொம்பவும் பயப்பட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம். அதே சமயத்தில் உதாசீனப்படுத்தவும் வேண்டாம். அரசாங்கம் சொல்றபடி சரியாக நடந்து கொள்வது தான் முதல்ல முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரித வேகத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்து, குறுகிய கால பிரச்சனைகளை சமாளித்துக் கொள்வது
 
இப்படிச செய்தால் கொரோனா பரவாது!
கொரோனா வைரஸ் பற்றி சரியான தகவல்களை விட தப்பான தகவல்கள் தான் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சரியான தகவல்களைச் சொல்வது பொறுப்புள்ள ஒவ்வொருவருடைய கடமையாகும்.
 
ரொம்பவும் பயப்பட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம். அதே சமயத்தில் உதாசீனப்படுத்தவும் வேண்டாம். அரசாங்கம் சொல்றபடி சரியாக நடந்து கொள்வது தான் முதல்ல முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரித வேகத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்து, குறுகிய கால பிரச்சனைகளை சமாளித்துக் கொள்வது அவசியமாகும். இந்த 21 நாட்களும் மிகவும் முக்கியமானதாகும்.
 
அதே சமயத்தில் பயந்து கிட்டே இருந்தாலும் வீட்டுக்குள்ளே இருக்கும் நிலையில் மிகவும் மனச்சோர்வடையந்து விட வாய்ப்பு இருக்கு. ஒரு வகையில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கை இயற்கை ஏற்படுத்தித் தந்த கட்டாய விடுமுறை என்றும் நினைத்துக் கொள்ளலாம். வாழ்க்கைத் துணையுடனும், குழந்தைகளுடனும் அன்பைப் பொழிவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு.
 
அப்படியே, கொரோனா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் வராமல் தடுக்க சின்ன யோசனைகள். கொரோனா காற்றில் 3 மணி நேரம் தான் உயிரோடு இருக்கும் என்கிறார்கள்.
 
கொரோனோ பாதிக்கப்பட்டவர்கள் யாராவது பொது இடத்தில் தும்மினாலோ, இருமினாலோ அவர்களிடமிருந்து வெளிவரும் கொரோனா வைரஸ் அங்கேயே மிதந்து கொண்டிருக்கும். யாராவது அதைக் கடந்து சென்றால், மூக்கு வாய் வழியே மற்றவர்களுக்கும் பரவி விடும். அதுவும், வெளியே செல்லக்கூடாது என்பதற்கு ஒரு காரணம்.
 
அதே சமயத்தில் அப்படி இருமுவதோ, தும்முவதோ ஏதாவது பொருட்கள் மீது, பஸ்ஸில் ஏறும் கைப்பிடிகள், ஆட்டோவில் இருக்கைகள், பக்கவாட்டுகள் அல்லது நம்ம வீட்டிற்குள் வேறு ஏதாவது பொருட்கள் மீது பட்டிருந்தால் அந்தப் பொருட்களில் அதிகபட்சம் மூன்று நாட்கள் கொரோனோ வைரஸ் உயிருடன் இருக்கும் என்கிறார்கள்.
 
அதாவது கொரோனோ பாதிக்கப்பட்டவர்கள் நம்ம வீட்டிற்கு வந்து இருமி, தும்மி அது மேஜை, நாற்காலி, கதவு என எங்காவது பட்டிருந்தால் அதிலே 3 நாட்கள் இருக்கும். அதனாலேயே யாரையும் வீட்டிற்கு அழைக்காதீர்கள். உங்க வீட்டு ஆட்கள் மட்டுமே இருங்கள் என்று சொல்கிறார்கள்.
 
முக்கியமா என்னன்னா, கொரோனா வந்துருக்கா இல்லையான்னு பார்த்து சொல்ல முடியாது. வந்த எல்லோருக்கும் காய்ச்சல், தலைவலின்னு வருவது கிடையாது. எந்த அறிகுறியுமே இருக்காது. ஆனால் அவர்கள் மத்தவர்களுக்கு கொரோனாவை பரப்பிக் கொண்டே இருப்பார்கள்.
 
குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு, பார்ப்பவர்களுக்கு எல்லாம் கொரோனாவை பரப்பிக் கொண்டே இருப்பார்கள்.  அதனால் தான் 21 நாட்கள் யாரும் யாரையும் பார்க்காமல் தனித்தும் விலகியும் இருங்கள் என்று அரசாங்கம் சொல்றாங்க.
 
என்னதான் கவனமா இருந்தாலும், எங்கே எதிலே கொரோனா இருக்குமோன்னு பயமா இருக்குதுல்ல. கொரோனாவை நம் கையால் தொட்டு அதே கையால் நம் முகத்தை துடைக்கும் போது மட்டுமே கண், மூக்கு, வாய் வழியே நம் உடம்புக்குள் செல்கிறது.
 
ஒருவேளை நம்ம கையில் கொரோனா ஒட்டியிருந்தாலும், அந்த கையால் முகத்தைத் தொடாவிட்டால் ஒன்னும் ஆகாது, கொரோனா நமக்கு வரவும் செய்யாது. அதனால் தான் அடிக்கடி கையை சோப்பு போட்டு கழுவுங்கள் என்று சொல்கிறார்கள்.
 
அப்படி சோப்பு போட்டு கழுவும் போது கையில் கொரோனா ஒட்டியிருந்தால் செத்துப் போயிடும். முகத்தை பயமில்லாமல் தொடலாம். ஏன், இவ்வளவு கவனமாக கையை சுத்தமா வைத்திருக்கனும்? நம்மை அறியாமலேயே நம்முடைய முகத்தை நமது கைகள் ஒரு மணி நேரத்தில் 16 தடவை தொடுகிறதாம்.
 
பொதுவாக நமக்கு எந்தக் கைப்பழக்கம் இருக்கிறதோ அதே கையால் தான் முகத்தை தொடுவோம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கையால் முகத்தைத் தொடுவார்களாம். இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் இடது கையால் முகத்தைத் தொடுவார்களாம்.
 
கொரோனா நேரத்தில் நமது பழக்கத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டால், நம்மை அறியாமல் முகத்தைத் தொட்டால் கூட கொரோனாவிடமிருந்து நம்மை காப்பாறிக் கொள்ள முடியும். வலது கைப்பழக்கம் உள்ளவர்கள், எந்தப் பொருளை தொடுவது, எடுப்பது எல்லாமும் இடது கையால் செய்யுங்கள்.
 
உதாரணமாக செல்போனை இடது கையால் எடுத்துப் பேசுங்கள், இடது கையால் கதவைத் திறங்கள்,, இப்படி எல்லாவற்றையும் இடது கைக்கு மாற்றும் போது வலது கை எதையும் தொடாமல் கொரோனா ஒட்டாமல் இருக்கும். முகத்தை மட்டும் வலது கையால் தொடும் போது கொரோனா நம் உடம்புக்குள் போகாது.
 
கையை மாத்துங்க… கொரோனாவை விரட்டுங்க..
 
 
 

From around the web