1 லட்சம் கிளைகள், வெளிநாடு தமிழர்களுக்கான அமைப்பு.. திமுகவில் சட்டதிருத்தம்!

ஊராட்சி என்பது மிகப்பெரிய ஊர்கள் கொண்டது. இதனை ஒரு செயலாளர் இருந்து கவனிக்க முடியாது. அதனால் கிளைகளாகப் பிரித்திருக்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின் பேசிய ஸ்டாலின், “இதுவரை 12,500 ஊராட்சி செயலாளர்கள் இருந்தார்கள். இனிமேல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப்போகின்றன. அதனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக்கழகச் செயலாளர்கள் வரப்போகிறார்கள். அதன்மூலம் மக்களோடு மக்களாக ஒன்றாக இணைந்து நெருக்கமாகப் பணியாற்றிட முடியும். 30, 40 வருடங்களுக்கு
 

1 லட்சம் கிளைகள், வெளிநாடு தமிழர்களுக்கான அமைப்பு.. திமுகவில் சட்டதிருத்தம்!ராட்சி என்பது மிகப்பெரிய ஊர்கள் கொண்டது. இதனை ஒரு செயலாளர் இருந்து கவனிக்க முடியாது. அதனால் கிளைகளாகப் பிரித்திருக்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின் பேசிய ஸ்டாலின்,

“இதுவரை 12,500 ஊராட்சி செயலாளர்கள் இருந்தார்கள். இனிமேல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப்போகின்றன. அதனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக்கழகச் செயலாளர்கள் வரப்போகிறார்கள். அதன்மூலம் மக்களோடு மக்களாக ஒன்றாக இணைந்து நெருக்கமாகப் பணியாற்றிட முடியும். 30, 40 வருடங்களுக்கு முன்பு எப்படிப் பணியாற்றினோமோ, அதுமாதிரி பணியாற்றிட முடியும். எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் நமது வெற்றியைப் பற்றி நான் பெருமை பொங்கச் சொன்னேனோ, அதேபோல் நமக்கு இருக்கும் வருத்தத்தையும் சொல்லியாக வேண்டும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஆளும் கட்சி அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையைப் பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்ததால் தோற்றோம் என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. நமது பணியில் ஏதோ குறைபாடு இருக்கிறது. அதுவும் தோல்விக்கு ஒரு காரணம். ஆகவே கழகத்தின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும். மாநாடு போடுகிறோம். பொதுக்கூட்டம் நடத்துகிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம். சட்டமன்றத்தில் வாதாடுகிறோம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறோம். இவைகளெல்லாம் மக்களுக்காக. கட்சிக்காகச் செய்யவேண்டியது என்பது, அமைப்பை பலப்படுத்துவது, கிளைகளை உருவாக்குவது, உறுப்பினர்களை அதிகப்படுத்துவது, மக்களோடு மக்களாக நிர்வாகிகள் இரண்டறக் கலந்து பழகுவது.

அடிமட்ட நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் அரவணைத்துச் செல்வது ; தலைமை கழகத்தோடு மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது; இத்தகைய கட்டமைப்பில்தான் கழகம் நிற்கிறது. அப்படி நிற்கும் கழகம்தான் வெற்றி பெறும்! பொதுக்குழுவில் இரண்டு முக்கியமான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். திருநங்கைகளை கழகத்தில் இணைக்க ஒரு சட்டத் திருத்தம்; “திருநங்கைகள்” என்ற பெயருக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தவர், தலைவர் கலைஞர் அவர்கள். அதேபோல் , வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கான அமைப்பு; அவரவர் வாழும் நாடுகளில் அமைத்துக்கொள்ளவும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தி.மு.க.,வை நோக்கி மக்கள் வரவேண்டுமென்றால், மக்களை நோக்கி தி.மு.க. நிர்வாகிகள் வேகமாகச் செல்ல வேண்டும்.

பேசியவர்கள் பலர் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்றீர்கள். தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்; அதில் சந்தேகமில்லை. நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் அந்த வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்! உண்மையாக உழைக்க வேண்டும்! ஓயாமல் உழைக்க வேண்டும்! நமது வெற்றியைத் தடுப்பதற்கு மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது. பத்திரிகைகளில், சமூகவலைதளங்களில், தி.மு.க.வைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். நம்மைத்தான் ஆளுங்கட்சி என எண்ணிக்கொண்டு, கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். நம்முடைய ரத்தம், வியர்வை, உழைப்பு, ராஜதந்திரம், ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி, நாம் வெற்றி பெற வேண்டும்.

இனி வரப்போகும் காலம் நமக்கு சவாலான காலமாகத்தான் இருக்கப்போகிறது. எந்தச் சவாலையும் சந்திப்போம். யாராவது சவால் விட்டால்தான் நமக்கும் அதிக வேகம் பிறக்கும். அந்த வேகம், விறுவிறுப்பு இப்போது பிறந்திருக்கிறது. இந்தப் பொதுக்குழுவில் நாம் எடுக்கவேண்டிய உறுதி, கோட்டையை விட்டு கொள்ளைக் கூட்டத்தை விரட்டிடுவோம் என்ற உறுதிதான்,” என்று கூறியுள்ளார்.

A1TamilNews.com

 

From around the web