திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று!

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும் சென்னை மேற்கு மாவட்ட திமுக எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் அந்தந்த மாவட்டங்களில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். ஜெ.அன்பழகனும் அவருடைய பகுதியில் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா
 

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று!சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும் சென்னை மேற்கு மாவட்ட திமுக எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் அந்தந்த மாவட்டங்களில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ஜெ.அன்பழகனும் அவருடைய பகுதியில் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பல உடல் உபாதைகள் ஜெ.அன்பழகனுக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள முதல் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தான்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனைப் பார்த்து “அண்ணனுக்கு 70 வயது என்பதால் பயப்படுகிறார் போலும். கொரோனா வந்தால் நாங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றுவோம்,” என்று ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர்  சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். தற்போது திமுக எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web