பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள் பத்திப் பேசனும் – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

சென்னை : தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளைக் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை எழுப்பியுள்ளார். பாராளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் எடுத்துரைத்த தமிழகத்தின் பிரச்சினைகள் விவரம் வருமாறு: “தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் றைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாத நிலையில் கடந்த 28.5.2019 அன்று 9.19 டி.எம்.சி. தண்ணீரை
 

பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள் பத்திப் பேசனும் – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!சென்னை :  தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளைக் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை எழுப்பியுள்ளார். 

பாராளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்  கலந்துகொண்டு அவர் எடுத்துரைத்த தமிழகத்தின் பிரச்சினைகள் விவரம் வருமாறு:

“தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் றைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.  கடந்த எட்டு ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாத நிலையில் கடந்த 28.5.2019 அன்று 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை  நிறைவேற்ற கர்நாடக அரசுக்கு  அழுத்தம் தரவேண்டும்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் மேகதாது அணை கட்டக்கூடாது என கர்நாடகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டவேண்டும். 

தமிழகத்தின் அனைத்து கட்சியை சார்ந்த  55 எம்.பி. களும் சேர்ந்து கர்நாடகம் மேகதாது  அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையைப் பிரதமரிடம் நேரில் சந்தித்து வைத்தனர்.  தமிழக சட்டப்பேரவையிலும் இந்த தீர்மானம் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை மீறி கர்நாடகம் அணை கட்டிக்கொண்டிருக்கிறது. இதை உடனடியாக தடுத்து நிருத்த வேண்டும்.

இந்தி போல தமிழையும்  ஆட்சிமொழியாக்கிடவேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழையும் அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்திடவேண்டும். தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நிதியுதவியுடன் சிறப்பு திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திடவேண்டும். விவசாயத்திற்கான பட்ஜெட் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும்.

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். விவசாயிகள் மத்திய அரசு வங்கிகளில் பெற்ற விவசாய கடனை  ரத்து செய்திட வேண்டும். தமிழ் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படவேண்டும்,” என்ற கோரிக்கைகளை டி.ஆர்.பாலு முன் வைத்துள்ளார். 

தமிழ் மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துள்ள திமுக- காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் இந்த பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கலாமா?.

– வணக்கம் இந்தியா

From around the web